search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரி தொகுதி"

    இந்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் பூரி தொகுதியில் போட்டியிடுவதற்கு 90 சதவீத வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவரான ரதீப் புரோகித் தெரிவித்துள்ளார். #pmmodi #parliamentelection

    புவனேஸ்வர்:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 2 இடங்களில் போட்டியிட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு பதிலாக ஒடிசா மாநிலம் பூரி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து ஒடிசா பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், மூத்த தலைவருமான பிரதீப் புரோகித் கூறியதாவது:-

    பூரி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதற்கு 90 சதவீத வாய்ப்பு உள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் பிரதமர் போட்டியிட்டால் நாங்கள் பெருமை அடைவோம். இது குறித்து கட்சியின் தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம். பிரதமர் மோடி பூரி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதான் கூறும்போது, “பூரி தொகுதியில் இருந்து பா.ஜனதா புதிய வடிவம் பெற தொடங்கும்” என்றார். பிரதமர் மோடி பூரி தொகுதியில் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்கிறது. #pmmodi #parliamentelection

    வாரணாசி தொகுதியில் எதிர்ப்பு வலுத்துள்ளதால் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ஒடிசாவின் புரி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. #BJP #PMModi #Varanasi #ParliamentElection
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது குஜராத்தில் உள்ள வதோதரா, உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

    இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நிறுத்தப்பட்டிருந்தார். அவரை மோடி 1 லட்சத்து 79 ஆயிரத்து 739 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தார். இதனால் வாரணாசி தொகுதியை மோடி தக்க வைத்துக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து வாரணாசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டங்கள் வாரணாசியில் நடைபெற்றன.

    வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தில் மோடி, அந்த தொகுதி மக்களுக்காக ஏராளமாக செய்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடந்தபோது அது வாரணாசியில் எதிரொலித்தது.

    வாரணாசி முழுக்க மோடியை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், “மோடியே வாரணாசியை விட்டு வெளியேறு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் வாரணாசியில் மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து 2014-ம் ஆண்டு தேர்தலில் கெஜ்ரிவாலை நிறுத்தியது போல இந்த தடவையும் வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் சத்ருகன்சின்கா முன் வந்துள்ளார்.

    அவர் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ள அவர் விரைவில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணைய உள்ளார். எனவே அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் மோடியை எதிர்த்து களம் இறங்க உள்ளார்.

    வாரணாசியில் மோடியை எதிர்த்து சத்ருகன்சின்கா போட்டியிட்டால் அது பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. வாரணாசி தொகுதியில் சத்ருகன்சின்காவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது.

    அதற்கு முக்கிய காரணம் சத்ருகன் சின்கா, “பனாரசி பாபு” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வாரணாசி தொகுதியில் சத்ரு கன்சின்காவின் “சாயத்ஸ்” இன மக்கள் கணிசமான அளவுக்கு இருக்கிறார்கள். அவர்கள் சத்ருகன் சின்காவுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    இது மோடிக்கு 2014-ம் ஆண்டு கிடைத்த வாக்குகளை சரிய செய்யும். இது மோடிக்கு சிக்கலை உருவாக்கும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    வாரணாசி தொகுதியில் சத்ருகன் சின்கா மூலம் கடும் போட்டி ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதால் பிரதமர் மோடி வேறு தொகுதிக்கு மாற முடிவு செய்துள்ளார். மிக எளிதாக வெற்றி பெறக் கூடிய பாதுகாப்பான தொகுதி எது என்று அவர் ஆய்வு செய்து வருகிறார்.

    சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் போட்டியிடலாமா என்றும் அவர் ஆலோசித்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் என்பதால் வேறோரு மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


    உத்தரபிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பா.ஜ.க. வுக்கு எதிரான அலை வீசுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்த பிறகு பா.ஜ.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

    எனவே உத்தரபிரதேசத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு செல்ல பிரதமர் மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. அதன்படி பல தொகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    ஒடிசா மாநிலம் புரி தொகுதியில் களம் இறங்கலாமா? என்று மோடி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்துக்கள் நிறைந்த புரி தொகுதியில் நிற்பது மிக, மிக பாதுகாப்பானது என்று மோடி நம்புகிறார். எனவே புரி தொகுதியில் மோடி போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #BJP #PMModi #Varanasi #ParliamentElection
    ×